ரம்மி விளையாட்டில் ரூ.70 லட்சம் இழந்த லாரி டிரைவர் தற்கொலை: உறவினர் மறியல்
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளை-யத்தை சேர்ந்தவர் தமிழ்மணி, 39; லாரி டிரைவர். இவரது மனைவி யசோதா, 36; தம்பதியருக்கு, 2 மகன்கள் உள்ளனர். தமிழ்மணிக்கு, மொபைல் போனில், 'ரம்மி' விளையாடும் பழக்கும் இருந்-துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இரவு, 8:00 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. போனில் பேசியபடியே வெளியில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் காணாததால், இரவு, 10:00 மணிக்கு, மனைவி யசோதா போன் செய்து விசா-ரித்துள்ளார். அப்போது, லாரி பட்டறையில் இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவ-தாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, கோட்டைமேடு பகுதியில் உள்ள மரத்தில் தமிழ்மணி துாக்கிட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரிடம் உள்ள மொபைல் போனில், 'என் சாவுக்கு காரணம், நித்தியபி-ரகாஷ், பாலாஜி, விஜயகுமார் ஆகியோர் தான். ரம்மி விளையாட்டில், 70 லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டேன். இதனால் எனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை' என, வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்மணியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், நேற்று மதியம், 1:30 மணியளவில், பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவ-டிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்ததை-யடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்-றனர். மறியலால், இரண்டு மணிநேரம் போக்கு-வரத்து பாதிக்கப்பட்டது.