மொபட் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி பலி
மோகனுார்: நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 68; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, அணியாபுரம் அடுத்த பரளி பஞ்., கடக்கால் புதுாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். பரளி பிரிவு சாலையில் இருந்து மோகனுார் - நாமக்கல் சாலையை கடந்தார். அப்போது, நாமக்கல்லில் இருந்து மோகனுார் சாலையில், பல்சர் பைக்கை ஓட்டி வந்த நெய்க்காரன்பட்டியை சேர்ந்த மனோ-கரன், 25, மொபட் மீது மோதினார்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த இருவ-ரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மனோகரன், நாமக்கல் தனியார் மருத்துவமனை-யிலும், சுப்ரமணியம், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு, சுப்ரம-ணியம் உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.