ராம்நகர் ராமர் கோவிலில் தியாகபிரம்ம கானாஞ்சலி
கோவை : ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், 71வது ஆண்டு தியாகபிரம்ம கானாஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று மாலை 6:15 மணிக்கு பிரம்ம கேசவ கனபாடிகள் குழுவினரின் வேத கோஷம், பஞ்சரத்ன கீர்த்தனைகளின் கோஷ்டி கானம் நடந்தது.
தொடர்ந்து, பந்துலா ரமா குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இதில் பந்துலா ரமாவின் பாட்டு, வயலின் இசையும், மிருதங்கம் இசையும், கஞ்சிரா இசையும், இசை ஆர்வலர்களின் கைதட்டலை பெற்றது.
இன்று மாலை 6:15 மணிக்கு, ஜெயந்த் குழுவினரின் பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டிகானம் நடக்கிறது. இதில் வயலின், மிருதங்கம், கஞ்சிரா இசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement