சாலை புதுப்பிப்பு தாமதம்

பல்லடம் : பல்லடத்திலிருந்து, செட்டிபாளையம் வழியாக கொச்சி செல்லும் ரோடு கேரள மாநிலத்தை இணைக்கிறது.

மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில், சரக்கு வாகனங்கள், கன்டெய்னர்கள் மற்றும் டிப்பர் லாரிகள் உள்ளிட்டவை அதிக அளவில் வந்து செல்கின்றன.

சரக்கு போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ள இந்த ரோடு, பல்லடத்தில் இருந்து - கரடிவாவி வரை, கடந்த மூன்று ஆண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டதுடன், விரிவாக்கமும் செய்யப்பட்டது. கே.அய்யம்பாளையம் கிராமத்தில், இரண்டு கி.மீ., துாரம் ரோடு புதுப்பிக்கப்படவில்லை.

தற்போது இந்த ரோடு மிகவும் சேதமடைந்து வருகிறது. பல இடங்களில், ரோட்டில் விரிசல் ஏற்பட்டும், சிறு சிறு பள்ளங்கள் உருவாகியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement