சூளகிரியில் கொத்தமல்லி விலை சரிவு: மாடுக-ளுக்கு உணவாகும் அவலம்

ஓசூர்: சூளகிரி பகுதியில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி-யடைந்துள்ளதால், மாடுகளுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும், 5,900 ஏக்கரில் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம் வட்டார பகுதிகளில் மட்டும், 5,700 ஏக்கருக்கு மேல் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதை மையமாக வைத்து சூள-கிரியில் கொத்தமல்லி மார்க்கெட் இயங்குகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்திற்கு கொத்-தமல்லி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒரு கட்டு கொத்தமல்லி, 20 ரூபாய்க்கும், கிலோ அதிகப்-பட்சமாக, 90 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலை யில், தற்போதைய நிலவரப்படி ஒரு கட்டு கொத்த-மல்லி, 6 முதல், 8 ரூபாய்க்கு விற்கிறது. கொத்த-மல்லி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகளிடம் நேரடியாக வியாபாரிகள் ஒரு கட்டு கொத்த
மல்லியை, 2 முதல், 4 ரூபாய்க்கு வாங்குகின்-றனர். இது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது என்பதால், சூளகிரி அடுத்த சென்னப்பள்ளி அருகே விவசாயி ரமேஷ், 3 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள
கொத்தமல்லியை பறிக்காமல், மாட்டுக்கு தீவன-மாக விட்டு சென்றார்.
இது குறித்து, சூளகிரி பகுதி விவசாயிகள் கூறும் போது, 'கடந்த 3 மாதங்களுக்கு முன், 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை கொத்தமல்லி, 5,000 ரூபாய் வரை விற்பனையானது. இதை பார்த்து, 30 நாட்களில் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்து விடலாம் என நினைத்து, பல விவசாயிகள் கொத்தமல்லியை சாகுபடி செய்தனர்.
சீதோஷ்ண நிலையால் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்துள்ளது. தற்போது, 250 முதல், 500 ரூபாய்க்கு ஒரு மூட்டையை வாங்கு கின்றனர். ஒரு கட்டு கொத்தமல்லி, 2 ரூபாய்க்கு கேட்கின்-றனர். வெளியில் அதிகப்பட்சமாக, 8 ரூபாய்க்கு விற்கின்றனர். பறிப்பு கூலி, வாகன செலவு ஆகி-யவற்றுக்கு கூட கட்டுப்
படியாகாது. அதனால் அவற்றை பறிக்காமல் விட்டுள்ளோம். சில விவசாயிகள் கால்நடை
களுக்கு தீவனமாக்கி வருகின்றனர்'
என்றனர்.

Advertisement