கன்னிபாலி ஐயனாரப்பன் கருப்பசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா

பென்னாகரம்: பென்னாகரத்தை அடுத்த அஜ்ஜனஅள்ளி பஞ்., பெரியவத்தலாபுரத்தில் பழமையான கன்னிபாலி ஐயனாரப்பன் கருப்பசாமி மற்றும் பரிவார தெய்-வங்கள், ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

மங்கள இசை முழங்க விக்னேஸ்வரா பூஜையும் மகா கும்பாபிஷே-கமும் நடந்தது. அதன் பின், சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை சிறப்பு பூஜை நடந்தது. பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி மற்றும் விழா குழுவினர், தர்மகர்த்தா அண்ணாமலை, ஊர்-மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement