மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் சதீஷ்-குமார், 35. இவர், வேலுார் மாவட்டம், குடி-யாத்தம் பகுதியை சேர்ந்த விஜய்ஸ்ரீ, 31 என்ப-வரை, கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்க-ளுக்கு மகன், மகள் உள்ளனர். சதீஷ்குமார் குடும்-பத்துடன், தர்மபுரி அருகே, ஒட்டப்பட்டி ராயல்ந-கரில் வசித்தார். அவர், தர்மபுரி டவுனிலுள்ள ஜவு-ளிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மனைவி விஜய்ஸ்ரீயை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். அதியமான்கோட்டை போலீசார், மயங்கி கிடந்த விஜய்ஸ்ரீயை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நேற்று சதீஷ்கு-மாரை கைது செய்தனர்.

Advertisement