மூதாட்டியிடம் செயின் பறித்த இருவர் சிக்கினர்

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகரை சேர்ந்தவர் தீபக்; தனியார் நிறுவன இன்ஜினியர். இவரது தாயார், கடந்த, 17ம் தேதி மாலை, அதே பகுதியில் உள்ள மூன்றாவது வீதியில் நடைப்பயிற்சி சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், மூதாட்டி அணிந்திருந்த, மூன்று சவரன் நகையை பறித்து தப்பினர். தீபக், கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.


வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். அன்னூர் ரோட்டில் உள்ள தொழிற்பேட்டை அருகே, நேற்று வாகன சோதனை செய்தபோது, அவ்வழியே வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர்.


முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து, தப்ப முயன்ற அவர்களில் ஒருவர் கீழே விழுந்து, கை முறிந்தது. இருவரிடம் விசாரித்ததில், கண்ணன், அபிலாஷ் என்பதும், மூதாட்டியிடம் செயின் பறித்தவர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement