பின்னலுார் பள்ளியில் எழுதுபொருட்கள் வழங்கல்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு தமிழ்மன்றம் சார்பில் பின்னலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு தமிழ்மன்ற அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஜெயந்தி ஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், ஆனந்த் ஜெயராமன், கோபி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார்.
விழாவில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவனை, மற்ற மாணவர்களுக்கு எழுது பொருட்கள் தொகுப்பு, பேனா, பென்சில், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement