நடைபாதை ஆக்கிரமிப்பு: பஸ் நிலையத்தில் அவதி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதையை கடைகாரர்கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் வெளி ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் அன்றாட பணிகளுக்காக நகருக்குள் வந்து செல்கின்றனர்.

இதனால், பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்களின் கடைகளை வெளிப்புறத்தில் உள்ள நடைபாதையில் வைத்து ஆக்கிரமித்துள்னர்.

இதேப் போன்று பஸ் நிலையத்திற்கு பயணிகள் நடந்து செல்லும் வழியில் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பஸ் நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement