சிதம்பரம் பிராமணர் சங்க புதிய தலைவர் தேர்வு

சிதம்பரம், : தமிழ்நாடு பிராமணர் சங்க சிதம்பரம் கிளையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், சிதம்பரம் கிளையின் புதிய தலைவராக ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். தொடர்ந்து, சிதம்பரம் புதுதெருவில் உள்ள வேத பாராயண மடத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் சந்திரசேகரன், கணேச சங்கரமூர்த்தி, கிருஷ்ணவிலாஸ் கணேசன், சுவாமிநாதன், நடராஜன், பிரபாகரன், காளிதாஸ், சீனிவாசன், குருபிரவேஷ், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement