அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராவது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் ரவி தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
கல்லுாரி நுாலகத்துறை மற்றும் சேலம் வராண்டா ரேஸ் பயிற்சி மையம் இணைந்து, இந்த பயிற்சியை நடத்தின. அரசு போட்டி தேர்வு-களில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி எனும் தலைப்பில், வராண்டா ரேஸ் மைய முதன்மை பயிற்சியாளர் சதீஷ்குமார், பயிற்றுனர் ஸ்ரீஹரி பிரசாத் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி., வங்கி, ரயில்வே, குடிமை பணிகள் தேர்வுகளின் பாடத்-திட்டங்கள் குறித்தும், தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராவது, திட்டமிடுவது என, வழி-காட்டும் நெறிகளை விளக்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி நுாலகத் துறை செய்திருந்தது. இந்த பயிற்சி பட்டறையில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நுாலகர் கல்யாணி நன்றி கூறினார்.