'இளம் விவசாயிகள் ஊக்குவிக்க தொலைநோக்கு திட்டம் தேவை'
திருப்பூர் : கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் கொங்கு முருகேசன், பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில், விவசாயத்திற்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் அறிவிக்கப்பட்டுள்ள 'பிரதமர் தன் தானிய கிருஷி' திட்டம் வரவேற்கத்தக்கது.
உள்நாட்டு பருத்தி தேவையை பூர்த்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வணிகத்தில் இலக்கை அடைய இது உந்துதலாக இருக்கம்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யவும், அவர்களை நஷ்டத்தில் இருந்து காக்கவும் அடிப்படை ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வண்டும். இயற்கை விவசாயம் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இளம் விவசாயிகளை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.