தனியார் கிழங்கு மில்லின் ரசாயன கழிவு பீணியாற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பீணியாற்றின் கரையில் அமைந்துள்ள தனியார் கிழங்கு அரவை மில்லில் இருந்து, சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீரால், ஆற்று நீரும், நிலத்தடி நீரும் மாசடைந்து, விவசாயம் பாதிப்பதோடு, ஆற்று நீரை குடிக்கும் கால்ந-டைகள் இறப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே செல்லும் பீணியாறு மூலம், அலமேலுபுரம் ஏரி, வண்ணான் ஏரி, பள்ளிப்பட்டி சின்ன ஏரி, பெரிய ஏரி, காணியம்மன் குட்டை, அதிகாரப்பட்டி பனம-ரத்து ஏரி நிரம்புகிறது. அதன்பின் பீணியாறு வாணியாற்றில் சேர்கிறது. பீணியாற்றின் நீரால் சுற்றுவட்டாரத்திலுள்ள, 20க்கும் மேற்பட்ட கிரா-மங்களில், 6,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கிராம மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி-றது.
இந்த பீணியாற்றின் கரையில் இயங்கி வரும், தனியார் கிழங்கு அரவை தொழிற்சாலை கடந்த, 30 ஆண்டுகளாக ஆற்றிலிருந்தும், நிலத்தடி நீரையும், அரசின் அனுமதியின்றி எடுத்து வருகி-றது. மேலும், தொழிற்சாலை உள்ளே, 5 ஏக்கரில் மிகப்பெரிய குட்டையை வெட்டி, அதில் சுத்திக-ரிப்பு செய்யாத ரசாயன கழிவுகளை தேக்கி வைத்து, நேரடியாக ஆற்றில் விடுகிறது. ஆற்றின் கரையை உடைத்து, ஆற்றில் ரசாயன கழிவுகளை கலக்கச் செய்வதால், இந்த ஆற்று நீர் மூலம் பாசனம் செய்யும் பயிர்கள், கருகி விவசா-யிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதுமட்டு-மின்றி, ஆற்று நீர் மாசுபட்டு, அதை குடிக்கும் கால்நடைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆறு மற்றும் ஏரிகளில் மீன்கள் இறக்கின்றன. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என, விவசா-யிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அலமேலுபுரம் பகுதி விவசாயி சுரேஷ், 38, கூறியதாவது: பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த, 30 ஆண்டுகளாக இந்த கிழங்கு மில்லில் இருந்து வெளியேறும்
ரசாயன கழிவுநீரால், அப்பகுதி விவசாயிகள் கடு-மையாக பாதிக்கின்றனர். நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளதால், விவசாயம் செய்ய முடிய-வில்லை. கிணற்று நீரை கால்நடைகளுக்கு பயன்படுத்த முடிவதில்லை. கரையை உடைத்து, சுத்திகரிப்பு செய்யாத கழிவுகள் ஆற்றில் வெளி-யேற்றப்படுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஏ.பள்ளிப்பட்டி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 60, கூறியதாவது: பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள கிழங்கு மில்லில் இருந்து பீணியாற்றில் வெளி-யேற்றப்படும் ரசாயன கழிவுகளால், நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கிறது. ஆய்வு எனும் பெயரில் வரும் அதிகாரிகள், ஆலை மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முறையாக ஆய்வு செய்து, தொழிற்சாலை ரசாயன கழிவுகள் வெளியேற்ற தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.