இந்தியா - பாக்., எல்லையில் ராணுவ தளபதி திடீர் ஆய்வு

க்ரீக்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நேரில் ஆய்வு செய்தார்.

குஜராத்தின் சர் க்ரீக் செக்டார் பகுதியில் விமானப்படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி ஆய்வு செய்தார்.

ராணுவத்தினரின் கூட்டு பயிற்சிகள் மற்றும் தயார்நிலை செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட அவர், கடலோர காவல்படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு, வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக பாராட்டுகளை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்களை தடுக்கும் விதமாக, கடற்காவல் படையினர் சர் க்ரீக் பகுதியில் ஹோவர்கிராப்ட்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்தும் அதிகாரிகளிடம் தளபதி உபேந்திரா திவேதி கேட்டறிந்தார்.

Advertisement