எஸ்.எஸ்.வி.எம்., 25வது ஆண்டு விழா

கோவை, : மேட்டுப்பாளையம், ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிக் குழும உறைவிடப் பள்ளியின், 25வது ஆண்டு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக, பங்கேற்ற இன்கேஜ் அண்ட் ரீவின் ஹெல்த் நிறுவனத்தின் விஜய கருணாகரன் பேசுகையில், ''நாளைய உலகம், செயற்கை நுண்ணறிவினால்தான் கட்டமைக்கப்படவுள்ளது. இதற்கேற்ப, பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

கல்வி, கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் முதலிடம் பெற்ற மாணவர்கள், சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிக் குழுமத்தின் செயலர் மோகன்தாஸ், அறங்காவலர்கள் ஸ்ரீஷா, நிதின் மற்றும் அறிவுரையாளர் சாந்தா மரியா, முதல்வர் ஜான் ஹாரிசன் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement