கார் விபத்தில் சிக்கியதில் டிரைவர் பலி

காங்கேயம்: கோவை மாவட்டம், ஈச்சனாரி, பாடசாலை வீதியை சேர்ந்தவர் பவித்ரன்,26; கோவையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காங்கேயம் சிவன்மலையில் நடந்த நண்பரின் அக்கா திருமணத்திற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் டீ குடிக்க அவரது நண்பர்களுடன் சிப்ட் காரில் காங்கேயம் கல்லேரி சாலை வழியாக சென்றபோது அங்குள்ள தரைப்பாலத்தில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்தது.

இதில் பவித்ரன் தலையில் பலத்த காயமடைந்தார். 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், பவித்ரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement