வலுப்பூரம்மன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
பொங்கலுார் : பொங்கலுார், சேமலைக்கவுண்டம்பாளையம் வலுப்பூரம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, காப்பு கட்டுதல், கொடியேற்றம், மகா அபிஷேகம், அம்மன் புறப்பாடு நடந்தது.
இன்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை அம்மன் திருவீதி உலா, இரவு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.
நாளை மறுநாள் மதியம் 2:00 மணி அளவில் அலகுமலை கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் நடக்கிறது.
தேர்நிலையில் அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement