ஜன்னல், கதவை உடைத்த கரடி கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

குன்னுார் : குன்னுார் அருகே, நான்சச் உயர்நிலை பள்ளி வகுப்பறை ஜன்னல், கதவுகளை கரடி உடைத்து சேதப்படுத்தியது.

குன்னுார் குடியிருப்பு பகுதிகளில் இரவில் வரும் கரடிகள் கதவுகளை உடைத்து எண்ணெய், அரிசி உட்பட உணவு பொருட்களை உட்கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, உலிக்கல் பேரூராட்சி நான்சச் பகுதிக்கு அவ்வப்போது வரும் கரடிகள், யாரும் இல்லாத வீடுகளின் கதவுகளை உடைத்து, உள்ளே சென்று உணவு பொருட்களை உட்கொண்டு வருகின்றன.

இரு நாட்களுக்கு முன்பு, இங்குள்ள நான்சச் சி.எஸ்.ஐ., உயர்நிலை பள்ளி, அங்கன்வாடி மைய கதவு உடைத்து உள்ளே சென்று அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டன.

தொடர்ந்து, பள்ளி வகுப்பறை, ஆய்வு மையம் கதவு, ஜன்னல்கள் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மக்கள் கூறுகையில், 'கூண்டு வைத்து, கரடியை பிடித்து, வனப்பகுதிக்குள் விடவேண்டும்,' என்றனர்.

Advertisement