பாரதியார் கட்டுரை போட்டி வென்ற மாணவிக்கு பாராட்டு

கமுதி: கமுதி அருகே பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி சுசித்ரா, பாரதியார் தமிழ் கட்டுரை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று தமிழக கவர்னர் ரவியிடம் பரிசு பெற்றுள்ளார்.

கமுதி அருகே பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த சுசித்ரா சென்னையில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். தமிழ்நாடு அளவில் பாரதியார் தமிழ் கட்டுரை போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற சுசித்ரா மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இதனை எடுத்து கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவில் கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். மாநில அளவில் கட்டுரை போட்டியில் வென்று பாப்பனம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த சுசித்ராவை மக்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement