துணி வணிகர் சங்க பள்ளி நுாற்றாண்டு விழா உற்சாகம்

கோவை : கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்த, கோவை கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:




கோவை மாவட்டத்தில் இது போல் நுாற்றாண்டு கடந்த பள்ளிகள், 58 பள்ளிகள் இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஒரு பள்ளியின் சிறப்பு என்பது கட்டடம் மட்டுமல்ல, அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியரும்தான். அந்த வகையில், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் எல்லோரும், இந்த விழாவுக்கு வந்து இருப்பது சிறப்பாக உள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், தலைமையாசிரியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement