மின் கசிவால் பொருட்கள் எரிந்து நாசம்
பஞ்சப்பள்ளி: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே பாளை-யத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 32. இவர் பெங்க-ளூருவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை உறவினர் திருமணத்திற்கு வந்தவர் வீட்டை பூட்டி விட்டு, திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அப்போது, அவரது ஓட்டு வீட்டில் மின்-கசிவு ஏற்பட்டு, வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி யடித்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், பீரோ, கட்டில், 2 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் நகை தீயில் எரிந்து கருகியதாக, வீட்டின் உரிமையாளர் செல்-வராஜ் போலீசில் தெரிவித்தார். பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement