5ல் இலவச கண் சிகிச்சை முகாம்
ப.வேலுார்: நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், வரும், 5ல் இலவச கண் சிகிச்சை முகாம், ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் உள்ள சமுதாய கூடத்தில் நடக்கி-றது. இதில், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் உள்ள ரத்த கொதிப்பு அளவு, கண்ணில் பிரஷர் அளவு, கண்ணில் புரை, கிட்ட பார்வை, துாரப்-பார்வை, கண் நீர் அழுத்த நோய், கண்ணில் நீர்ப்பை அடைப்பு, மாறுகண், கருவிழி புண், சர்க்-கரை வியாதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பு, கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, திருச்செங்கோடு விவேகானந்தா கண் மருத்துவ-மனைக்கு, நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் அழைத்து சென்று இலவ-சமாக கண் அறுவை சிகிச்சை நடக்கிறது. பஸ் வசதி, மருந்துகள், கண் கண்ணாடி, உணவு வசதி அனைத்து ஏற்பாடுகளையும், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச-மாக நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.