ஆற்றில் குளித்த தொழிலாளி பலி
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுாரை சேர்ந்தவர் சூர்யா, 24; கட்டட தொழிலாளி. இவர், நண்பர்களுடன் காவிரி பகுதியில் உள்ள ஆற்றில், நேற்று மாலை, 5:00 மணிக்கு குளிக்க சென்றார்.
அங்கு, நண்பர்களுடன் குளித்துக்கொண்டி-ருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால், அதற்குள் சூர்யா தண்ணீரில் மூழ்-கினார். இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் செங்குட்வேலு தலை-மையில் வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட நேர தேடுதலுக்கு பின், இரவு, 8:00 மணிக்கு, சூர்-யாவை சடலமாக மீட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement