டில்லி சட்டசபை, ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது!

2

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் 70 தொகுதிகளுக்கு பிப்.,5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பிப். 8 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி.ராகுல் மற்றும் பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையின் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

ஈரேடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஒய்ந்தது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் தி.மு.க., மற்றும் நா.த.க., போட்டியிடுகின்றன. தி.மு.க., சார்பில் சந்திரகுமாரும், நா.த.க., சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரு கட்சிகளும் பிரசாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் இந்த தொகுதியிலும் பிரசாரம் ஓய்ந்தது.

Advertisement