திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.15 லட்சம் மோசடி; கேரளாவைச் சேர்ந்தவர் கைது
திண்டுக்கல்:ஆன்லைனில் வர்த்தகம் செய்ய முயன்ற பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரளா ஆசாமியை திண்டுக்கல் போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த 30 வயது பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் வந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
அதை உண்மை என்று நம்பிய அந்த பெண்ணும், வாட்ஸ் அப் மூலம் பயிற்சியில் கலந்து கொண்டார்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.15,50,000 அப்படி பணம் அனுப்பினார்.
அதன் பிறகு அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் ஏ டி எஸ் பி தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டு சிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஜீவா(31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மம்முத்கோயா என்பவரின் மகன் சமீர் (42) என்பவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்