இந்திய வீரர்கள் ஏமாற்றம்: சென்னை ஓபன் டென்னிசில்
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மணிஷ், விஷ்வகர்மா உள்ளிட்டோர் ஏமாற்றினர்.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், உக்ரைனின் எரிக் வான்ஷெல்பாய்ம் மோதினர். இதில் ஏமாற்றிய மணிஷ் 2-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா 1-6, 0-6 என பெல்ஜியத்தின் கிம்மர் கோப்ஜான்சிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவ் ஜாவியா 6-4, 5-7, 3-6 என ரஷ்யாவின் இகோர் அகாபோனோவிடம் போராடி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிராக் துஹான் 6-4, 1-6, 6-7 என உக்ரைனின் யூரி ஜவாகியனிடம் வீழ்ந்தார்.
இவர்கள் நால்வரும் பிரதான சுற்றுக்கு தகுதி பெறத்தவறினர். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா சார்பில் ராம்குமார் ராமநாதன், கரண் சிங், சசிகுமார் முகுந்த் பங்கேற்கின்றனர்.