புகார் பெட்டி சிறுவாபுரி கோவிலுக்குள் சுற்றி திரியும் நாய், மாடு
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, விசேஷ நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர்.
தரிசனம் செய்த பக்தர்கள், கோவில் உள்பிரகாரத்தில் ஆங்காங்கே அமர்ந்து பிரசாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரசாதம் சாப்பிடும் பகுதியில், ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன.
சமயத்தில், மாடுகளும் கோவிலுக்குள் நுழைகின்றன. இதனால் பக்தர்கள் அச்சம் அடைகின்றனர். கோவிலுக்குள் நாய்கள், மாடுகள் நுழையாமல் இருக்க, கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement