திரு/புகார் பெட்டி ; ஏ.டி.எம். , மையம் அகூரில் அமையுமா?

திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சியில் வாரச்சந்தை, துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், அகூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அத்தியாவசிய பணிகள் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் திருத்தணி - சோளிங்கர் மார்க்கத்தில் தினமும் சென்று வருகின்றனர்.

மக்கள் அதிகளவில் கூடும் இடமான அகூர் ஊராட்சியில் இதுவரை ஏ.டி.எம்., மையம் அமைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள், 6 - 10 கி.மீ., துாரம் திருத்தணி அல்லது கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளுக்கு அவசர தேவைக்கு பணம் எடுக்க செல்ல வேண்டியுள்ளது.

எனவே ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.ரவிசாந்தி,

அகூர்.

Advertisement