பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
கடம்பத்துார், திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களால், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர்பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கடம்பத்துார் ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த பாரத்தசாரதி, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணியிடத்தில் பணிபுரிந்து வந்த ஜி.சிவகுமார், கடம்பத்துார் ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement