மணல் கடத்திய இருவர் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், மேல்நல்லாத்துார் பகுதியில் மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார், நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற, 'பொலிரோ' வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 40 ஆற்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து இருவரை பிடித்தனர்.
இதையடுத்து, பொலிரோ வாகனத்தையும், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 35, சிலம்பரசன், 25, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement