தமிழக அமைச்சரவை பிப்., 10ல் ஆலோசனை

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டம், ஜனவரி 6 முதல் 11ம் தேதி வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து, 2025- - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக, சட்டசபை இம்மாத இறுதியில் கூடவுள்ளது.

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, வரும் 10ம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் அறிவிக்காமல், ஓரவஞ்சனையுடன் மத்திய பா.ஜ., அரசு செயல்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக, வரும், 8ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன பொதுக்கூட்டத்தை, தி.மு.க., நடத்துகிறது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய சிறப்பு திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதாக்கள் குறித்து, அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement