ஸ்ரீவி., மலையில் யானை உடல் 10 நாளுக்கு பின் கண்டுபிடிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில், செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில், 10 நாட்களுக்கு முன் உயிரிழந்த யானை அழுகிய நிலையில் கண்டறியப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் இருந்து, 3.5 கி.மீ.,யில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, யானை அடக்கம் செய்யப்பட்டது.
புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ்,''அந்த யானை இறந்து, 10 நாட்கள் ஆகி இருக்கலாம். இனப்பெருக்கத்திற்காக யானைகள் சண்டை போட்டதாக தெரியவில்லை. இறப்பு குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.
கடந்த 2023 நவம்பர் மாதம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டியில், 2 யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்ய முயன்ற போது, அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். விசாரணையில் வத்திராயிருப்பு நெடுங்குளம் பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தம் அவை என தெரிந்தது.
அதுபோல, சில ஆண்டுகளுக்கு முன், சாப்டூர் பகுதியில் இறந்த யானை எரிக்கப்பட்டது. இதில், வனத்துறை அலுவலர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தினசரி ரோந்து முறையாக நடக்காததே யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
கடந்த 2023 நவம்பர் மாதம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டியில், 2 யானை தந்தங்களை சிலர் விற்பனை செய்ய முயன்ற போது, அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். விசாரணையில் வத்திராயிருப்பு நெடுங்குளம் பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தம் அவை என தெரிந்தது.அதுபோல, சில ஆண்டுகளுக்கு முன், சாப்டூர் பகுதியில் இறந்த யானை எரிக்கப்பட்டது. இதில், வனத்துறை அலுவலர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தினசரி ரோந்து முறையாக நடக்காததே யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.