ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.67.66 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
கரூர்: ''ஊரக வளர்ச்சி துறை சார்பில், 1,268 பணிகள், 67.66 கோடி ரூபாய் மதிப் பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
தோகைமலை ஊராட்சி ஒன்றியம் நாகனுார், ஆர்.டி.மலை, கீழவெளியூர் பஞ்.,களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம், மேற்-கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி
திட்டப்பணிகளை, கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பல்வேறு
பணிகள் மேற்கொள்-ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எட்டு பஞ்சாயத்துகளில் கடந்த மூன்றரை
ஆண்டுகளில், அனைத்து கிராம அண்ணா மறும-லர்ச்சி திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை புனரமைக்கும் வகையில்
குளம், சிறுபாசன குளம் துார் வாருதல், கரைகளை பலப்படுத்-துதல் உள்ளிட்ட, 46 பணிகள், 4.40 கோடி ரூபாய்
மதிப்பீட்டிலும், குக்கிராமங்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளை மேம்-பாடு செய்திடும் வகையில்
சிமென்ட் சாலை அமைத்தல். வண்-ணக்கல் பதித்தல், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட, 638 பணிகள், 28.61
கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சமத்துவ மயா-னங்களில் தகனமேடை, காத்திருப்போர் கூடம், சுற்றுச்சுவர்,
தண்ணீர் மற்றும் தெருவிளக்கு அமைத்த வகையில், 107 பணிகள், 6.64 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,
பள்ளிகளில் உட்-கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொது பயன்பாட்டு செய்யும் வகையில் அங்கன்வாடி, பள்ளி
கழிப்பறைகள், கூடுதல் வகுப்-பறை கட்டடங்கள்.
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சைக்கிள் செட் அமைத்த வகையில், 202 பணிகள், 12.98 கோடி ரூபாய்
மதிப்-பீட்டிலும்,பசுமை மற்றும் சுத்தமான கிராமம் திட்டத்தின் கீழ் சாக்கடை வடிகால், உறிஞ்சுகுழி அமைத்தல்,
மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் வேலி அமைத்தல் போன்ற, 146 பணிகள், 6.60 கோடி ரூபாய் மதிப்பில்
என மொத்தம், 1,268 பணிகள், 67.66 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்
ராஜேந்திரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.