திருமணம் செய்து 16 மாதம் கழித்து பாதுகாப்பு கோரி காதல் ஜோடி மனு



ஈரோடு: ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணன் மகள் நர்மதா, 23; ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில் காதல் கணவன் தமிழ் பரதன், 26, என்பவருடன் நேற்று வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



நான் பி.டெக்., முடித்து கோவையில் ஒரு ஐ.டி., கம்பெனியில் பணியாற்றுகிறேன். என்னுடன் பள்ளி முதலே படித்த தமிழ்பர-தனை, ௨௦௨௩ செப்.,28ல் அவிநாசியில் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். சட்டப்படி பதிவு செய்த நிலையில்,



இருவரும் அவரவர் வீட்டில் வசித்தோம். திருமணம் குறித்து பேசியபோது இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

என் தந்தை தி.மு.க., பகுதி செயலாளராக உள்ளார். உறவினர்கள் மூலம் மிரட்டி வரு-கின்றனர்.
இருவரின் உயிருக்கு உறவினர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்-புள்ளது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு

செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement