கரூரில் விற்பனைக்கு குவிந்த முலாம்பழம்



கரூர்: ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, கோடைக்காலமாகும். கரூர் மாவட்டத்தில், பனி பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், உடலுக்கு ஏற்படும் சூட்டை குறைக்கும் வகையில், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நீர்மோர், முலாம்பழம் ஆகியவை கரூரில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.



கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில், வேன்களில்

முலாம்பழம் விற்ப-னைக்கு குவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டி-வனம் மற்றும் சுற்று வட்டார

பகுதிகளில் இருந்து, கரூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ள முலாம் பழம், கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய்

வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொது-மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement