வைக்கோல் லாரியில் தீ


எலச்சிபாளையம்: திருச்சி, மண்ணச்சநல்லுாரில் இருந்து விற்பனைக்காக, 50,000 ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. எலச்சிபாளையம் யூனியன், மணலி ஜேடர்-பாளையத்தில், நேற்று மதியம், 2:00 மணிக்கு லாரி சென்றுகொண்-டிருந்தபோது, மின் ஒயரில் உரசி தீப்பற்றியது. இதையறிந்த டிரைவர்



திருப்பதி, 45, அரை கிலோ மீட்டர் துாரம் லாரியை ஓட்-டிச்சென்று, யாரும் இல்லாத வாரச்சந்தை பகுதியில்

நிறுத்தினார். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலு-வலர் கரிகாலன், ராசிபுரம்

தீயணைப்பு நிலைய அலுவலர் பழகார ராமசாமி தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை

அணைத்தனர்.
யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால், இரண்டு மணி நேரம் அப்பகுதி முழுவதும் புகை

மண்டலமாக காட்சியளித்தது.

Advertisement