மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி முத்துராஜ் 28, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் 2018 மே 18 அன்று மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் தரப்பினர் அளித்த புகாரின்படி கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து முத்துராஜை கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் முத்துகிருஷ்ணன் ஆஜரானார். முத்துராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.

Advertisement