நிறைவு நாளில் சுயேட்சைகள் வினோத பிரசாரம்



ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., - நா.த.க., உட்பட, 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


நா.த.க.,வினர் முழு அளவில் பிரசாரம், மக்கள் சந்திப்பு, தலைமை ஒருங்கி-ணைப்பாளர் சீமானின் வாகன மற்றும் மேடை பேச்சுடன் சுற்றி வந்தனர். தி.மு.க.,வினர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீடு வீடாக, வீதி வீதியாக, முக்கிய நபர்கள் சந்திப்பு என்ற ரீதியிலும், வேட்பாளர் தனியாகவும் பிரசாரம் செய்தார். சுயேட்சைகள்

ஆரம்பம் முதல் அடக்கி வாசித்துவிட்டு, ஒரு வாரமாக பிரசா-ரத்தை தீவிரப்படுத்தினர். சுயேட்சை வேட்பாளர்

நுார்முகம்மது, வேனில் முழுமையாக குடை போல் கட்டி அதில் சென்று பிர-சாரம் செய்தார்.
தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் செல்லபாண்டியன், 'ஷூ' சின்னம் வழங்கப்பட்டதால், மக்களை நோக்கி

'ஷூ'வை காண்-பித்து பிரசாரம் செய்தார். இடைஇடையே விதவை பெண் கோல-மிட்டும், நேற்று சாட்டையால்

தன்னை அடித்தபடியும் பிரசாரம் செய்தார்.
சுயேட்சை வேட்பாளர் லோகநாதனுக்கு 'வாளி' சின்னம் வழங்-கப்பட்டுள்ளதால், கலர் கலரான வாளிகளை

வாங்கி, மக்களிடம் காண்பித்தும், தண்ணீர் நிரப்பி எடுத்து சென்றும் ஓட்டு சேக-ரித்தார். நேற்று வாளியை

தலையில் வைத்து பாட்டுப்பாடியும், ஆடியும் ஓட்டு சேகரித்தார். நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்-ததால்,

பெரும்பாலான வேட்பாளர்கள் வீதி வீதியாகவும், பிர-தான சாலைகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement