பின், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா



நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 2025-26ம் ஆண்டுக்கு, 6,626 கோடி ரூபாய் அறிவிக்கப்-பட்டு உள்ளது. இது கடந்த, 2009-2014ம் ஆண்டுக்கான சராசரி ஒதுக்கீடான, 879 கோடியை விட, 7.5 மடங்கு அதிகம். தமிழ-கத்தில், 2,587 கி.மீ., நீளமுள்ள, 22 திட்டங்கள், 33,467 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. 77 ரயில் நிலையங்கள், 2,948 கோடி ரூபாய் செலவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.



1,460 கோடி செலவில் 'கவாச்' பாதுகாப்பு அமைப்-புகள் இயக்குவதற்கான, 601 பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே சேலம் கோட்டத்தில் உள்ள போத்தனுாரில், 200 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல் ரயில்வே கோட்டத்தில், 271 கோடி மதிப்பில் அம்ருத் பாரத் திட்-டத்தில், 15 ரயில் நிலையங்களை

மேம்படுத்தும் பணிகள் நடக்-கின்றன. இந்த பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீத-முள்ள பணிகள்

மூன்று மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். கோவை, கரூர், ஈரோடு, சேலத்தில் பல்வேறு ரயில்வே பணிகள்

நடந்து வருகின்றன.
இவ்வாறு கூறினார்.
ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உடனிருந்தார்.

Advertisement