பாலிகிளினிக் மருத்துவமனையில் இன்று மெகா ரத்த தான முகாம்
சேலம்: சேலம் பாலிகிளினிக் மருத்துவமனை மற்றும் சிவராம்ஜி ரத்த வங்கி இணைந்து, ரத்ததான முகாமை சேலம் ஓமலுார் சாலையில் உள்ள பாலிகிளினிக் மருத்துவமனை வளாகத்தில் இன்று (௪ம் தேதி) காலை ௮:00 மணி முதல் நடத்துகிறது.
முகாமில் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், செவிலி-யர்கள், ஊழியர்கள், இக்கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர். சேலம் பாலிகிளினிக் மருத்து-வமனை இயக்குனர் டாக்டர் ராஷ்மி
ராவ் கூறுகையில், ''மனித உயிரின் மிகப்பெரிய படைப்பான ரத்த தானத்தை, ௫௦௦க்கும் மேற்பட்ட நபர்கள்
முகாமில் தானமாக அளிக்க உள்ளனர். பொது-மக்களும் ரத்ததான முகாமில் பங்கேற்கலாம். ரத்தம் அளிப்பதால்
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த சிவப்பணுக்கள் அளவு அதிக-ரிக்கிறது. புற்றுநோய் அபாயத்தை குறைத்து
மனித இதயத்திற்கு நன்மை அளிக்கும். முகாமில் ரத்ததானம் வழங்கும் அனைவ-ருக்கும், இலவசமாக
மருத்துவ முதலுதவி பெட்டி மற்றும் ரத்த-தான சான்றிதழ் வழங்கப்படும்,'' என்றார்.