ஹிந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த, நல்லமுத்து பாளையத்தை சேர்ந்தவர் பால-சுப்பிரமணி, 40. இவர் ஹிந்து முன்னணி ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கடந்த, 1ல், பி.உடையாபட்டி பஸ் ஸ்டாப் பய-ணியர் நிழற்கூடத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல் நோட்டீஸ் ஒட்டி இருந்தார். அதில், ஹிந்து முன்னணி சார்பாக, திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வோம் என வாசகம் இருந்-ததால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு
இருப்பதாக கூறி, தோகைமலை போலீசார் பாலசுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement