பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி
குளித்தலை: திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்-தவர் சபரிநாதன், 25. இவர் தனக்கு சொந்தமான பஜாஜ் பைக்கில், திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் சென்றார்.
குளித்தலை, கடம்பர் கோவில் பாலம் அருகே கரூர் திருமாநி-லையூரை சேர்ந்த மெக்கானிக் சரவணன், 52, என்பவர் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டுச் சென்றார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்-சாலை மருதுார் பிரிவு ரோடு அருகே சென்ற போது, பின்னால் வேகமாக வந்த பொலிரோ பிக்அப் வேன் பைக் மீது மோதியது. இதில்,
பைக்கை ஓட்டி வந்த சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த சரவணன், திருச்சி
அரசு மருத்-துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து, குளித்தலை போலீசார் விபத்து ஏற்படுத்திய பொலிரோ வேன் டிரைவர், திருச்சி மாவட்டம், சின்ன
காட்டாங்-குளத்தை சேர்ந்த, அருண் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.