மாயமான கட்டட தொழிலாளி

புதுச்சேரி: மாயமான கட்டட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனூர் ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் மூர்த்தி, 53; கட்டட தொழிலாளி. இவர் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இவரது இருசக்கர வாகனம் திருக்கனுார் போலீஸ் நிலையத்தில் இருப்பதாக, மூர்த்தி மகன் வினோத்திற்கு, வில்லியனூர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார்.

திருக்கனுார் போலீஸ் நிலையம் சென்ற வினோத் அங்கு இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வினோத் வில்லியனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement