கல்யாண உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரில் உள்ள ஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன்-மகாலட்சுமி, ரகுமாயி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை திருமஞ்சனமும், மகா தீபாரதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலையில் சீர்வரிசை எடுத்து வருதல், நிச்சயதார்த்தம், மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் நலங்கு வைத்தலை தொடர்ந்து ஸ்ரீரங்க பரிமள பாண்டுரங்கன் -மகாலட்சுமி, ரகுமாயி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement