வடிகால் வாய்க்கால் பணி முதல்வர் துவக்கி வைப்பு
பாகூர்: காட்டுக்குப்பம் - கன்னியக்கோவில் இடையே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், புதுச்சேரி - கடலுார் நெடுஞ்சாலையில், காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் வரை ரூ.3.37 கோடி செலவில் 'யு' வடிவ வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காட்டுக்குப்பத்தில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement