மழையால் பாதித்த நெற்பயிர்கள் காரைக்காலில் அறுவடை தீவிரம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 12,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து, தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.

தற்போது திருநள்ளாறு, நெடுங்காடு, அம்பகரத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

சில இடங்களில், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்கு வயல்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் , மழையால் சேதமடைந்துள்ளது.

ஒரு பக்கம் கடன் பிரச்னையும், மற்றொரு பக்கம் மழையும் பெய்து பாதிப்பதாக ஏற்படுத்தியுள்ளதால் அறுவடை செய்யும் நெல்லை, தடையின்றி அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement