அண்ணாதுரை நினைவு தினம் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி: அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, அரசு மற்றும் பல்வேறு அரசில் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி தலைமையில், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள், லட்சுமிநாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க.: தி.மு.க.,சார்பில் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ., க்கள் அனிபால் கென்னடி, சம்பத் உட்பட கட்சியினர், ஏ.எப்.டி., திடலில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அ.தி.மு.க.,: அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், பெரியசாமி, ராஜாராமன் உட்பட கட்சியினர், உப்பளம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உரிமை மீட்பு குழு: அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தலைமையில், கட்சியினர், குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள, அண்ணாதுரை உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். புதிய நீதிக்கட்சி சார்பில் தலைமை நிலைய செயலாளர் தேவநாதன் தலைமையிலும், அ.ம.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., யூ.சி.ஆறுமுகம் தலைமையிலும், ம.தி.மு.க., சார்பில் ஹேமா பாண்டுரங்கன் தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement