திண்டிவனம் அருகே குட்கா விற்ற மூவர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஒலக்கூர் அடுத்த கடவாம்பாக்கம் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பதாக வந்த தகவலை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதேகிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் தேவராஜ்,35; மற்றும் இவருக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த அச்சரப்பாக்கம் ஒத்தவாடை தெரு ரகமத்துல்லா, 59; சோத்துப்பாக்கம் விஜயகுமார்,43; ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்திய கார், மொபட் மற்றும் 5 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement