பைக் விபத்தில் வாலிபர் சாவு

விருத்தாசலம்: பைக்கில் சென்ற வாலிபர் கீழே விழுந்து இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுநெமிலி புதுகாலனியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கோவிந்தசாமி, 26. கோவையில் டீ மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி தர்ஷினி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று காலை கோவிந்தசாமி பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து, அதே இடத்தில் இறந்தார்.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement